என்னுடைய லட்சியம் பெரிது.. ஆனால் இப்படி ஆவேன் என்று கனவு கண்டதில்லை… வெங்கையா நாயுடு

என்னுடைய லட்சியம் பெரிது.. ஆனால் இப்படி ஆவேன் என்று கனவு கண்டதில்லை… வெங்கையா நாயுடு

என்னுடைய லட்சியம் பெரிது மற்றும் முக்கியமானது. இருந்தாலும் துணை குடியரசு தலைவராக ஆவேன் என்று ஒரு போதும் கனவு கண்டதில்லை என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

கோவாவில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இன்ஸ்ட்டியூட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு துணை குடியரசு தலைவர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: என்னுடைய இலட்சியம் கொஞ்சம் பெரிது மற்றும் முக்கியமானது இருந்தது. இருந்தாலும் நான் இந்தியாவின் துணை குடியரசு தலைவராக வேண்டும் என்று ஒரு போதும் கணவு கண்டதில்லை.

என்னுடைய லட்சியம் பெரிது.. ஆனால் இப்படி ஆவேன் என்று கனவு கண்டதில்லை… வெங்கையா நாயுடு
விவேகானந்தர் பாறை

நான் அதிர்ஷ்டசாலி, நான் துணை குடியரசு தலைவராக ஆனேன். கலாச்சாரம், உணவு வகைகள் மற்றும் வெளிநாட்டினரை நாடு வரவேற்கும் அணுகுமுறை ஆகியவை இந்தியாவுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும். 2018-19ம் நிதியாண்டில் 8.75 கோடி வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது அதாவது மொத்த வேலைவாய்ப்பில் 12.75 சதவீத பங்கினை இந்த துறை கொண்டுள்ளது.

என்னுடைய லட்சியம் பெரிது.. ஆனால் இப்படி ஆவேன் என்று கனவு கண்டதில்லை… வெங்கையா நாயுடு
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

வேலைவாய்ப்பு அதிகம் அளிக்கும் ஒரு துறைகளில் ஒன்று என்பதால் பயணம் மற்றும் சுற்றுலா துறை நாட்டின் பொருளாதாரத்தில் மிகவும் இன்றியமையாதது. வெளிநாடுகளுக்கு செல்லும் முன் உங்கள் நாட்டை பாருங்கள்.
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடம், அந்தமானில் உள்ள செல்லுலார் ஜெயில் மற்றும் குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை ஆகியவற்றை இளைஞர்கள் கண்டிப்பாக சென்று பார்வையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.