தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கத்தை செலுத்தும் அம்பானி…. வாடிக்கையாளர்களை இழக்கும் வி.ஐ., ஏர்டெல்….

தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கத்தை செலுத்தும் அம்பானி…. வாடிக்கையாளர்களை இழக்கும் வி.ஐ., ஏர்டெல்….

கடந்த ஜூன் மாதத்தில் புதிதாக 45 லட்சம் வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது.

மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் நம் நாட்டின் தொலைத்தொடர்பு துறையில் காலடி வைத்தபிறகு அந்த துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. ரிலையன்ஸ் ஜியோவின் சலுகைகளால் பல தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. தற்சமயம் ஜியோவை சமாளித்து ஏர்டெல், வி.ஐ. (முன்பு வோடாபோன் ஐடியா) மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் மட்டும் தொலைத்தொடர்பு துறையில் காலத்தை தள்ளிவருகின்றன.

தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கத்தை செலுத்தும் அம்பானி…. வாடிக்கையாளர்களை இழக்கும் வி.ஐ., ஏர்டெல்….
ஜியோ

ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் தனது ஆதிக்கத்தை மிகவும் வலுவாக செலுத்த தொடங்கி விட்டது. ஜியோவின் அதிரடி சலுகைகளால் வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க்கில் இணைந்து வருகின்றனர். உதாரணமாக, கடந்த ஜூன் மாதத்தில் வி.ஐ. மற்றும் ஏர்டெல் ஒட்டுமொத்த அளவில் சுமார் 59 லட்சம் வாடிக்கையாளர்களை அல்லது இணைப்புகளை இழந்துள்ளன. ஆனால் ஜியோ நிறுவனம் பல லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கத்தை செலுத்தும் அம்பானி…. வாடிக்கையாளர்களை இழக்கும் வி.ஐ., ஏர்டெல்….
வி.ஐ.

டிராய் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வி.ஐ. நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 48.2 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்களில் 11.3 லட்சம் பேர் இணைப்புகளை துண்டித்துள்ளனர். அதேசமயம் ஜியோ நிறுவனம் அந்த மாதத்தில் புதிதாக சுமார் 45 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இதே நிலை நீடித்தால் நம் நாட்டின் தொலைத்தொடர்பு துறையில் ஜியோ நிறுவனத்தின் ஆதிக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.