முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பாகிஸ்தான் ஒரு சுடுகாடு.. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்காதீங்க.. விஷ்வ இந்து பரிஷத்..

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பாகிஸ்தான் ஒரு சுடுகாடு.. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்காதீங்க.. விஷ்வ இந்து பரிஷத்..

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பாகிஸ்தான் ஒரு சுடுகாடாக மாறி வருகிறது. ஆகையால் இங்கு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ஹைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் காரக் மாவட்டத்தில் டெர்ரி என்ற கிராமத்தில் தீவிர இஸ்லாமிய கட்சியை சேர்ந்த ஒரு கும்பல் ஒன்று இந்து கோயில்களை இடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக 30 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இந்து கோயில்கள் இடிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் அரசுக்கு இந்திய தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பாகிஸ்தான் ஒரு சுடுகாடு.. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்காதீங்க.. விஷ்வ இந்து பரிஷத்..
சுரேந்திர ஜெயின்

இந்து பரிஷத்தின் சர்வதேச கூட்டு பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் பாகிஸ்தானில் இந்து கோயில்கள் தகர்க்கப்பட்டது தொடர்பாக கூறியதாவது: பாகிஸ்தான் உருவானது முதல் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஒரு சுடுகாடாக மாறி வருகிறது. அந்நாட்டில் இந்துக்கள் கொலை செய்யப்படுவது, இந்துக்களை கட்டாயம் மதமாற்றம் செய்வது மற்றும் முஸ்லிம் அல்லாத பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது அன்றாட நிகழ்வாக உள்ளது.அங்கு (பாகிஸ்தானில்) பேரணி நிறுத்தப்பட்டு இருந்தால் கோயில் இடிக்கப்பட்டு இருக்காது. ஆனால் சில மக்களின் இயதத்தில் ஒரு மாற்றம் இருக்க வேண்டும்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பாகிஸ்தான் ஒரு சுடுகாடு.. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்காதீங்க.. விஷ்வ இந்து பரிஷத்..
சி.ஏ.ஏ. எதிராக போராட்டம் (கோப்புப்படம்)

இந்தியாவில் குறிப்பிட்ட மக்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் குறிப்பிட்ட பிரிவு தங்களது மனதை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்துக்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் இந்த மாதரி நடத்தப்பட்டால், அவர்களின் கோயில்கள் இடிக்கப்பட்டால் அவர்கள் எங்கே போவார்கள்?. அவர்களுக்கு ஒரே இடம் இந்தியா, நம் நாடு, ஆகையால் நாம் அவர்களை வரவேற்க வேண்டும். ஆகையால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தாலும் அவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.