அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழை பெய்யும்!

 

அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழை பெய்யும்!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழை பெய்யும்!

அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது . ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழை பெய்யும்!

இதுவரை தமிழகத்தில் அதிகபட்சமாக வேதாரண்யம் 18 செமீ, பேராவூரணி 15 செமீ, தலைஞாயிறு, அரபட்சணம் தலா 14 செமீ,திருப்பூண்டி 12 செமீ மழை பதிவாகியுள்ளது. குடவாசல், முத்துப்பேட்டை தலா 11 செ.மீ., பட்டுக்கோட்டை 10 செ.மீ, மதுக்கூர், மன்னார்குடி, மணமேல்குடி, திருவாரூர் தலா 9 செ.மீ,நாகை, கும்பகோணம், நன்னிலம், மஞ்சளாறு தலா 8 செமீ, மயிலாடுதுறை, காரைக்கால் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.