வோடபோன் ஐடியா நிறுவனத்தில் 400 கோடி டாலர் முதலீடு? அமேசான் – வெரிசான் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தில் 400 கோடி டாலர் முதலீடு? அமேசான் – வெரிசான் திட்டம்

வோடபோன் இந்தியா நிறுவனத்தில் அமேசான் மற்றம் வெரிசான் நிறுவனங்கள் 400 கோடி டாலரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனத்தில் 400 கோடி டாலர் முதலீடு? அமேசான் – வெரிசான் திட்டம்

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட வோடபோன் நிறுவனம், இந்திய செல்போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக உள்ளது. ஏற்கனவே ஐடியா செல்போன் நிறுவனத்தை வாங்கி, தன்னுடன் இணைத்துக்கொண்டு வோடபோன் ஐடியா என்ற பெயரில் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை அளித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 8 காலாண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் வோடபோன் நிறுவனம், மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய 50 ஆயிரம் கோடி பாக்கி தொகையால், பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது.

வோடபோன் ஐடியா நிறுவனத்தில் 400 கோடி டாலர் முதலீடு? அமேசான் – வெரிசான் திட்டம்

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் சமீபத்தில் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள், பாக்கி தொகையை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் செலுத்த அவகாசம் நீட்டித்து உத்தரவிட்டது. இதனால் வோடபோன் ஐடியா நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கியை 2031ம் ஆண்டுக்குள் செலுத்த கால அவகாசம் கிடைத்தது.

வோடபோன் ஐடியா நிறுவனத்தில் 400 கோடி டாலர் முதலீடு? அமேசான் – வெரிசான் திட்டம்

ரூ. 30 ஆயிரம் கோடி
இந்நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனத்தில் பங்குகளை வாங்குவது தொடர்பாக அமேசான் மற்றும் வெரிசான் ஆகிய நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு நிறுவனங்கள் கூட்டாக 4 பில்லியன் டாலரை ( இந்திய மதிப்பில் ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி ரூபாய்) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

– எஸ். முத்துக்குமார்