அத்தனை சந்தோஷங்களையும் அள்ளித்தரும் சுக்கிரன்!

 

அத்தனை சந்தோஷங்களையும் அள்ளித்தரும் சுக்கிரன்!

சுக்கிரன் என்றால் ஆசை என்று அர்த்தம். அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம். சுக்கிரன் என்றால் இன்பம் என்று பொருள் கொள்ளலாம். அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர். கலை உணர்வால் இன்பம் உண்டாக்குவார். அழகு, ஆராதனையால் இன்பம் ஏற்படுத்துபவர்.

ஒன்பது கிரகங்களிலும் மிகமிகத் தனித்தன்மை வாய்ந்தவர் சுக்கிரன். மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு சுக்கிரனுக்கு உண்டென்று சொன்னால், அது சுக்கிரன் ஒருவர் மட்டுமே. அனைத்து லக்னங்களுக்கும் கேந்திரங்களில் ஆட்சி அல்லது உச்சம் பெறுவார். மற்ற கிரகங்களுக்கு இந்தச் சிறப்பு கிடையாது. இயற்கை சுபகிரகங்களில் முதலிடம் வகிக்கும் குருவுக்குக் கூட இல்லாத இந்த அமைப்பு சுக்கிரனுக்கு மட்டுமே இருக்கிறது.

அத்தனை சந்தோஷங்களையும் அள்ளித்தரும் சுக்கிரன்!

சுக்கிர பகவானின் அருளைப் பெறுவது மிக மிக அவசியம். திருமண யோகத்துக்கும் வீடு மனை உள்ளிட்ட சொத்துகளைப் பெறுவதற்கும் சந்தான பாக்கியம் எனப்படும் குழந்தைச் செல்வம் கிடைப்பதற்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் இல்லாமல், கடன் தொல்லை இல்லாமல் வாழ்வதற்கும் சுக்கிரனின் அருளைப் பெறவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்ய பெருமக்கள்.

சுக்கிர பகவான் யோககாரகன். இவ்வுலக வாழ்வில், என்னென்ன சந்தோஷங்கள் இல்லற வாழ்க்கைக்கு தேவையோ, அவை அனைத்தையும் நமக்குத் தந்தருளும் வள்ளல் கடவுள்தான் சுக்கிர பகவான்.

அத்தனை சந்தோஷங்களையும் அள்ளித்தரும் சுக்கிரன்!

சுக்கிர பகவானுக்கு உரிய நாள் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர வாரத்தில், சுக்கிர பகவானை பிரார்த்திப்பதும் வழிபடுவதும் விசேஷமானது.

வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர காயத்ரி சொல்லி வழிபடுங்கள்.

சுக்கிர பகவான் காயத்ரி மந்திரம்! ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி தந்நோ சுக்ர ப்ரஜோதயாத்

அத்தனை சந்தோஷங்களையும் அள்ளித்தரும் சுக்கிரன்!

அதாவது, அஸ்வக் கொடியைக் கொண்ட அசுரர்களின் குருவே. எங்களுக்கும் எங்களின் குடும்பத்துக்கும் சுப நிகழ்வுகளைத் தந்தருள்வாய். வெள்ளி எனும் சுக்கிர வேந்தனே. எங்களுக்கு எல்லாக் காலத்திலும் வரங்களைத் தந்து வாழவைப்பாயாக! என்று அர்த்தம்.

இந்த நன்னாளில், சுக்கிர வார வெள்ளிக்கிழமையில், வீட்டில் விளக்கேற்றி, சுக்கிர காயத்ரி மந்திரத்தை சொல்லி பாராயணம் செய்து, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். கஷ்டங்களும் துக்கங்களும் காணாமல் போகும். கவலைகள் அனைத்தும் பறந்து போகும். பொன்னும் பொருளும் சேரும். கடன் தொல்லையிலிருந்தும், கடனால் ஏற்பட்ட துன்பங்களிலிருந்தும் விடுபடுவீர்கள்.

-வித்யா ராஜா