கொரோனா வார்டை சுத்தப்படுத்தும் போது பிடிபட்ட 10 விஷப்பாம்புகள்.. அதிர்ச்சியில் நோயாளிகள்!

கொரோனா வார்டை சுத்தப்படுத்தும் போது பிடிபட்ட 10 விஷப்பாம்புகள்.. அதிர்ச்சியில் நோயாளிகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு புறம் இருக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளையும் மருத்துவமனை வளாகத்தையும் தூய்மையாக பார்த்துக் கொள்ள தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வார்டை சுத்தப்படுத்தும் போது பிடிபட்ட 10 விஷப்பாம்புகள்.. அதிர்ச்சியில் நோயாளிகள்!

இந்த நிலையில், சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் கொரோனா வார்டை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு விஷப்பாம்புகள் இருப்பதை கண்டு அச்சம் அடைந்த மருத்துவக் குழுவினர் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த நபர்கள், கொரோனா வார்டு அருகே இருந்த 10க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளை பிடித்துள்ளனர். மருத்துவமனையில் விஷப்பாம்புகள் இருந்தது நோயாளிகளிடையேயும், பொது மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.