2024 ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடும்- எம்.பி. வெங்கடேசன்

 

2024 ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடும்- எம்.பி. வெங்கடேசன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 2024 ஆம் ஆண்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துவக்கி உள்ளதாகவும், அதனை விரைவு படுத்துவதற்கு தேவையான முயற்சியை தென் தமிழக எம்பிக்கள் எடுத்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடும்- எம்.பி. வெங்கடேசன்

மத்திய அரசுக்கு மக்கள் பிரதிநிதிகள் அனுப்பும் கடிதங்களுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்க வேண்டும் என்ற தீர்ப்பு வந்துள்ள நிலையில், அந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டும் நிகழ்வு மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வழக்கறிஞர்கள் கண்ணன், புகழேந்தி மற்றும் குழுவினருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வில் பேசிய எம்.பி. மா.சுப்ரமணியன், “மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கை அதிகமாகி கொண்டிருக்கிறது. அரசின் 80% திட்டங்களுக்கு இந்தியிலே பெயர் சூட்டப்படுகிறது. இந்தியாவின் மொழி சமத்துவத்திற்கு இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்திய ஆட்சி மொழி சட்டத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வந்துள்ளது. இந்தி பேசாத மாநில மக்களின் மொழி உரிமையை காக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்தி முடித்த வழக்கறிஞர் கண்ணன், புகழேந்தி மற்றும் குழுவினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். சமீபத்தில் எய்ம்ஸ்க்கான நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. அதில், 2024 ஆம் ஆண்டிற்குள் நடத்தி கொடுப்பதற்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜப்பான் நிறுவனம் கடன் கொடுப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி விட்டன. கால தாமதம் ஆவதை தவிர்க்க தென் தமிழக எம்பிக்கள் போராடி கொண்டிருக்கிறோம். விரைவில் எய்ம்ஸை கொண்டு வந்து சேர்ப்போம்” எனக் கூறினார்.