வெங்கட் பிரபு நடித்த ‘லாக்கப்’ ZEE5 யில் வெளியாகும் தேதி?

 

வெங்கட் பிரபு நடித்த ‘லாக்கப்’ ZEE5 யில் வெளியாகும் தேதி?

கொரொனா நோய்த் தொற்றால் நாடே மார்ச் மாதம் முதன் இன்றுவரை முடங்கி விட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. பள்ளி, கல்லூரிகள் இனி என்றைக்கு திறக்கப்படும் எனும் தேதியை அறிக்கமுடியாத சூழல்.

நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் சினிமா தியேட்டர்கள் இன்னும் ஓரிரு மாதங்களுக்கு திறக்க வாய்ப்பில்லை என்பதாகவே தெரிகிறது. அதனால், படத்தை முடித்து ரிலீஸ்க்கு தயாராக வைத்திருப்பவர் OTT யில் வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

வெங்கட் பிரபு நடித்த ‘லாக்கப்’ ZEE5 யில் வெளியாகும் தேதி?

ஜோதிகா நடித்த ‘பொன்மகள், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெண்குயின்’ ஆகிய படங்களில் O.T.T யில் வெளியாகின. வரலட்சுமி நடித்த ‘டேனி; விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், வெங்கட் பிரபு, வைபவ், வாணிபோஜன் நடித்த ‘லாக்கப்’ படமும் O.T.T யில் வெளியாக உள்ள அறிவிப்பு வந்துள்ளது.

சென்னை 28 யில் நடித்த நித்தின் சத்யா தயாரித்த லாக்கப் படத்தை ZEE5 OTT தளத்தில் வரும் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) வெளியிடவிருக்கிறார்கள்.

வெங்கட் பிரபு நடித்த ‘லாக்கப்’ ZEE5 யில் வெளியாகும் தேதி?

த்ரில்லர் கலந்த கதைக்களத்தில் உருவக்கப்பட்டிருக்கும் ;லாக்கப்’ படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். S.G.சார்லஸ் இயக்குநராக அறிமுகமாகிறார். பிசாசு படத்தின் இசையமைப்பாளர் அரோல் கொரேலி இப்படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார்.

‘லாக்கப்’ படத்தைத் தொடர்ந்து பல படங்கள் OTT தளத்தில் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.