பீட்சா, பர்க்கரை விடுங்க… வத்த குழம்பு, மோர் குழம்பு சாப்புடுங்க – வெங்கையா நாயுடு

 

பீட்சா, பர்க்கரை விடுங்க… வத்த குழம்பு, மோர் குழம்பு சாப்புடுங்க – வெங்கையா நாயுடு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 41 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர். இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பை முடித்த 2,942 மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “கொரோனாவிற்கு பின் நேரடியாக பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி. 41 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். வேளாண்பல்கலைகழகம் பார்க்க தூய்மையாகவும் , அழகாவும் இருக்கிறது. அது கோவைக்கு பெருமை சேர்க்கிறது. இந்த பட்டத்திற்கு உரிமையானவர்கள் மாணவர்கள் அல்ல பெற்றோர்கள். வேளாண்மை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நானும் எனது குடும்பமும் விவாசயத்தில் ஆர்வம் உள்ளவர்கள். பருவ நிலை மாற்றம் வேளாண்மைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இந்த கடுமையான காலக்கட்டத்தில் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ள நிலையில் வேளாண் துறை மட்டும் வளர்ச்சியைக் நோக்கி சென்றது.

பீட்சா, பர்க்கரை விடுங்க… வத்த குழம்பு, மோர் குழம்பு சாப்புடுங்க – வெங்கையா நாயுடு

பருவ நிலை மாற்றத்தால் வேளாண் தொழில் பாதிக்கப்பட்டு பெரும்பான்மையான உணவு பயிர்கள் அழிந்துவிட்டன. தமிழக அரசு 2019 ஆம் ஆண்டு நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதால் அவர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறவு பெற்றுள்ளது.
சூரிய ஒளி மின் உற்பத்திக்கு பிரதமர் ஆர்வம் காட்டி, அது குறித்த விழிப்புணர்வைக் மேற்கொண்டு வருகிறார். மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களைக் செய்து வருகிறது. விவசாயிகளுக்கும் ,விவசாயத்திற்கு நாம் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டை விட 59 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு விவசாயம் அதிகரித்துள்ளது. கொரொனா நெருக்கடி காலத்திலும் உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. கடினமான காலத்திலும் அர்ப்பணிப்பைக் காட்டிய விவசாயிகளுக்கு நன்றி. நீர்ப்பாசன ஆதாரங்கள் மாசுபடுவதும் கவலைக்குரியது. குறிப்பாக தமிழகம் போன்ற நீர் பற்றாக்குறை உள்ள மாநிலத்தில், வறட்சியைத் தாங்கும் மரபணு வகைகளையும் நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களையும் உருவாக்க வேண்டும். வேளாண்மை பொருளாதாரம் சார்ந்த்து மட்டுமல்ல. நமது கலாச்சாரம் சார்ந்த்தும் கூட

மக்கள்தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வேளாண்மையை நம்பியுள்ளனர். வேளாண்மை கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு. விவசாயத்தை லாபகரமான, உற்பத்தித்திறன் மிக்கதாக மாற்றுவது அவசியம். கோவிட் 19 தொற்றுநோய் பரவல் ஏற்பட்டு இருந்தாலும் , இந்திய பொருளாதாரம் 2021 ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதத்துடன் மீண்டும் முன்னேறும் என நம்புகின்றோம். தொற்று காலத்தில் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயம் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியது. இந்தியாவில் நூற்றுக்கணக்கான உணவுகள் உள்ளன. தமிழ்நாட்டில் விதவிதமான உணவு வகைகள் உள்ளன. வத்த குழம்பு, மோர் குழம்பு போன்ற உணவு வகைகள் நமக்கானது. பர்க்கர், பீட்சா போன்றவை நம்முடைய கால நிலைக்கு ஏற்ற உணவு வகை கிடையாது” எனக் கூறினார்.