8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்டை திரும்பப்பெற வெங்கையா நாயுடு மறுப்பு!

 

8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்டை திரும்பப்பெற வெங்கையா நாயுடு மறுப்பு!

மாநிலங்களவையில் 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்பப்பெற வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் தேதி மாநிலங்களவையில் வேளாண்துறை சம்பந்தப்பட்ட 3 மசோதக்கள் தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்து, அவை துணை தலைவர் ஹரிவன்ஷ் இருக்கையை முற்றுகையிட்டு 8 எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இது குறித்து ஹரிவன்ஷ் அளித்த புகாரின் பேரில், அமளியில் ஈடுபட்ட எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்டை திரும்பப்பெற வெங்கையா நாயுடு மறுப்பு!

இதனால் நேற்று பிற்பகலில் இருந்து 2ம் நாளாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். எம்பிக்கள் மீதான சஸ்பெண்டை திரும்பப்பெறாவிடில் எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை தொடரை புறக்கணிக்கும் என காங்கிரஸ் எம்.பி குலாம் அபி ஆசாத் அவையில் தெரிவித்தார்.

இந்த நிலையில், 8 எம்.பிக்கள் மீதான சஸ்பெண்டை திரும்பப்பெற வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்துள்ளார். அவையை அவமதிக்கும் விதமாக அவர்கள் நடந்து கொண்டதால் தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.