“நோட்டுக்கும், சீட்டுக்கும் கொள்கைகளை விற்றவர் ராமதாஸ்” : வேல்முருகன் கடும் விமர்சனம்!

“நோட்டுக்கும்,  சீட்டுக்கும்  கொள்கைகளை விற்றவர் ராமதாஸ்” : வேல்முருகன் கடும் விமர்சனம்!

நோட்டுக்கும், சீட்டுக்கும் தன் கொள்கைகளை அதிமுகவிடம் பாமக விற்றுவிட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சாடியுள்ளார்.

“நோட்டுக்கும்,  சீட்டுக்கும்  கொள்கைகளை விற்றவர் ராமதாஸ்” : வேல்முருகன் கடும் விமர்சனம்!

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழகத்தின் உரிமைகளை தமிழக அரசு மத்திய அரசிடம் காவு கொடுத்து வருகிறது.

“நோட்டுக்கும்,  சீட்டுக்கும்  கொள்கைகளை விற்றவர் ராமதாஸ்” : வேல்முருகன் கடும் விமர்சனம்!

வன்னியர்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு கோரி கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக 26ற்கும் மேற்பட்ட வன்னியர் சங்கங்கள் போராடி வருகின்றன. ஆனால் பாமகவிற்கு இதைப்பற்றியெல்லாம் அக்கறையும், கவலையும் இல்லை. அவர்கள் நோட்டுக்கும் சீட்டுக்கும் தன் கொள்கைகளை அதிமுகவிடம் விற்பனை செய்துவிட்டனர். தன் கல்வி நிறுவனங்கள் வன்னியர் நல வாரிய சொத்துக்களுடன் சேர்ந்து விடாமல் இருக்கவே ராமதாஸ், பாஜக – அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார் . மக்களவைத் தேர்தலுக்கு முன்புவரை தமிழக முதல்வரை ‘டயர் நக்கி’ என்று ராமதாஸ் கூறி வந்தார் . ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு ராமதாஸ் , அதிமுக – பாஜக கூட்டணியில் சேர்ந்துவிட்டார் . அதேபோல் முதல்வரும் ,ராமதாஸ் பேசியதை மறந்து விட்டு அவரை சேர்த்துக் கொண்டுள்ளார்” என்றார்.

“நோட்டுக்கும்,  சீட்டுக்கும்  கொள்கைகளை விற்றவர் ராமதாஸ்” : வேல்முருகன் கடும் விமர்சனம்!

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். எனவே நெய்வேலி தொகுதியில் யார் போட்டியிட வேண்டும்? என்ற கடுமையான போட்டி நிலவுகிறது. திமுக எனக்கு நெய்வேலி தொகுதியை ஒதுக்கினால் போட்டியிடுவேன்” என்று கூறினார்.