‘உதயசூரியன் சின்னத்தில்’.. பண்ருட்டி தொகுதியில் களமிறங்கும் வேல்முருகன்!

 

‘உதயசூரியன் சின்னத்தில்’.. பண்ருட்டி தொகுதியில் களமிறங்கும் வேல்முருகன்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விட்டது. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதற்கான பட்டியல் நேற்றே வெளியாகவிருந்தது. ஆனால், கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்ட குழப்பத்தால் இன்று தொகுதி பட்டியல் வெளியாகவிருக்கிறது. திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு திமுக ஒரு தொகுதியை ஒதுங்கியிருந்தது.

‘உதயசூரியன் சின்னத்தில்’.. பண்ருட்டி தொகுதியில் களமிறங்கும் வேல்முருகன்!

இந்த நிலையில், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது. பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வேல்முருகன் போட்டியிட உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

‘உதயசூரியன் சின்னத்தில்’.. பண்ருட்டி தொகுதியில் களமிறங்கும் வேல்முருகன்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவுடன் சந்திப்பு நடத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேல்முருகன், பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். திமுக தலைமையிலான தோழமை கட்சிகளுடைய தலைவர்களின் வாழ்த்துக்களுடன் பண்ருட்டியில் போட்டியிட்டு, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களுக்கு தொண்டாற்றுவேன். ஏற்கனவே இரண்டு முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்று கூறினார்.

மேலும் அதிமுக கூட்டணி பலமிழந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெரும். வரலாறு காணாத வெற்றியாக இது அமையும் என்றும் தெரிவித்தார். கடந்த 2001, 2006 ஆம் ஆண்டுகளில் பண்ருட்டியில் பாமக சார்பில் போட்டியிட்ட வேல்முருகன் எம்எல்ஏ ஆக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.