மரணமடைந்த கைதி செல்வமுருகன் மீது பொய்வழக்கு போடப்பட்டது: வேல்முருகன் குற்றச்சாட்டு!

மரணமடைந்த கைதி செல்வமுருகன் மீது பொய்வழக்கு போடப்பட்டது: வேல்முருகன் குற்றச்சாட்டு!

கடந்த மாதம் விருதாச்சலத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி செல்வமுருகன், 4ம் தேதி உயிரிழந்தார். அவரை காவலர்கள் தான் கொலை செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டிய உறவினர்கள் உடலை பெற்றுக் கொள்ளாமல் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், செல்வமுருகனின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிபிசிஐடி அதிகாரியும் மாற்றம் செய்யப்பட்டார்.

மரணமடைந்த கைதி செல்வமுருகன் மீது பொய்வழக்கு போடப்பட்டது: வேல்முருகன் குற்றச்சாட்டு!

ஏற்கனவே சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல் மரணங்கள் தொடருவது பதைபதைக்கச் செய்கிறது. வியாபாரி செல்வமுருகனின் மரணம் மர்மம் இருக்கிறது என்றும் அது திட்டமிடப்பட்ட கொலை தான் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.

மரணமடைந்த கைதி செல்வமுருகன் மீது பொய்வழக்கு போடப்பட்டது: வேல்முருகன் குற்றச்சாட்டு!

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேல்முருகன், செல்வமுருகன் மீது பொய் வழக்குப்போடப்பட்டது. அவர் ஒரு வழிப்பறி திருடன் அல்ல, வளர்ந்து வரும் கிராம தொழிலதிபர். செல்வமுருகன் மீது திட்டமிட்டு திருட்டு வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். மேலும், நகைக்கடை ஒன்றில் செல்வமுருகனை காவலர்கள் மிரட்டும் சிசிடிவி காட்சியையும் வேல்முருகன் வெளியிட்டார். செல்வமுருகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .