வேகமெடுக்கும் கொரோனா: வேலூரில் மேலும் ஒரு மாதம் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

வேலூரில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இறைச்சி கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே செயல்படும். துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவை ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி, ஆகிய 4 நாட்கள் செயல்படும். மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து நாட்களும் வழக்கம்போல் இயங்கும். ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் வேலூர் மாவட்டத்தில் தொடரும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

மயிலாப்பூரில் மிகப்பிரபலமான ‘ஜன்னல் கடை’ உரிமையாளர் கொரோனாவால் மரணம்!

தமிழகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொடிய வகை வைரஸால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சமீபத்தில் நெல்லையின் அடையாளமாகத் திகழும் இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்கிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்...

தேனி: ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆன 100 கொரோனா நோயாளிகள்!

தேனியில் கொரோனாத் தொற்று அதிகாித்து வரும் நிலையில், குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. நேற்று ஒரே நாளில் 100 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் முதல் கொரோனாத் தொற்று மார்ச் மாதம்...

ஊரடங்கை மீறி ஊரைக்கூட்டி ஊர்வலம் -மாப்பிள்ளையை மாமியார் வீட்டுக்கு கூட்டி போன போலீஸ் …

கொரானாவை ஒழிக்க புதிதாக திருமணத்தில் 50 பேருக்கு மேல் கூடகூடாது என்று சட்டம் இயற்றியுள்ள நிலையில், அதை மீறி மக்களை கூட்டி திருமண ஊர்வலம் நடத்தியதால் புவனேஷ்வரில் கல்யாண மாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். ஒடிஷா...

என்.எல்.சி கோர விபத்தால் அதிகரிக்கும் மரணங்கள்.. பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

கடந்த 1 ஆம் தேதி கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே...
Open

ttn

Close