வேலூரில் மேலும் 103 பேருக்கு கொரோனா வைரஸ் : பாதிப்பு எண்ணிக்கை 1842 ஆக உயர்வு!

54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு 597 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,329 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 64 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 42 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேலும் 103பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை வேலூரில் 1842 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த 62 வயது நபர் ஒருவர் கொரோனாவால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில் இன்று ஒரேநாளில் 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு 597 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Most Popular

கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்- குடியரசு தலைவர்

74வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “புதிய கல்விக் கொள்கை சிறப்பானது. தாய்மொழியில் கற்பது,...

பாடகர் எஸ்.பி.பி. நலமாகவே இருக்கிறார் -எஸ்.பி.பி மகன் சரண்

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை நலமாகவே இருக்கிறார் என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது....

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும்...

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...
Do NOT follow this link or you will be banned from the site!