தேவேந்திர குல வேளாளர் பெயர் பரிந்துரைக்கு எதிராக, வேளாளர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளர் பெயர் பரிந்துரைக்கு எதிராக, வேளாளர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை

வேளாளர் சமுதாயத்தின் பெயரை மாற்று சமூகத்தினருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் வேளாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் பட்டியலினத்தை சேர்ந்த 7 உட்பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க மத்திய அரசுக்கு, தமிழக அரசு சார்பில் பரிந்துரை வழங்கப்பட்டது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து வேளாளர் சமூகத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தேவேந்திர குல வேளாளர் பெயர் பரிந்துரைக்கு எதிராக, வேளாளர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், கோவை தெற்கு தாலுகா, செஞ்சிலுவை சங்கம் அருகில் நான்கு திசை வேளாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்ட நடைபெற்றது. இதில் கொங்கு வேளாளக்கவுண்டர் பேரவை, நான்குதிசை வேளாளர்கள் சங்கம், சோழிய வேளாளர் சங்கம் உள்ளிட்ட 40 சமூகங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆரப்பாட்டத்தின் போது, வேளாளர் என்ற பெயரை மற்று சமுகத்தினருக்கு வழங்க கூடாது என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.