தேவேந்திர குல வேளாளர் பெயர் பரிந்துரைக்கு எதிர்ப்பு; வெள்ளாளர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

 

தேவேந்திர குல வேளாளர் பெயர் பரிந்துரைக்கு எதிர்ப்பு; வெள்ளாளர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தேனி

பள்ளன் உள்ளிட்ட 7 பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க தமிழக அரசு பரிந்துரை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனியில் வெள்ளாளர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளன், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக நேற்று அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, வெள்ளாளர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இன்று தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவேந்திர குல வேளாளர் பெயர் பரிந்துரைக்கு எதிர்ப்பு; வெள்ளாளர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அவலுகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அந்த அமைப்பின் மகளிரணி தலைவர் தமிழ்ச்செல்வி மணிகண்டன் தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, தமிழக அரசின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தனர். இதேபோல், பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தமிழக முதலமைச்சருக்குஎதிராக முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.