வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறப்பு! ஆனால் பக்தர்களுக்கு அனுமதியில்லை

 

வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறப்பு! ஆனால் பக்தர்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளால் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களும் சுமார் 161 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டன

வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறப்பு! ஆனால் பக்தர்களுக்கு அனுமதியில்லை

இந்நிலையில் நாளை திறக்கப்படவுள்ள வேளாங்கண்ணி பேராலயம் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும் என ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார். ஆனால் வரும் 8 ஆம் தேதி வரை பேராலயத்திற்கு வெளிமாவட்ட மற்றும் வெளி மாநில மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பேரூராட்சி வாசிகள் மட்டுமே காலை 8 மணி முதல் ஐந்து முப்பது மணி வரை முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும், 07.09.20 அன்று தேர்பவனியும் 08.09.2020ஆம் தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. அதுவரை பேராலயத்திற்குள் பொதுமக்கள் வர அனுமதியில்லை. ஆலய நிர்வாகிகள் போதகர்கள் மட்டுமே திருவிழாக்களில் கலந்துகொள்ளலாம். தங்கும் விடுதிகள் 08.09.2020 வரை திறக்கப்படாது என்றும், கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்