புயல் காரணமாக 24,25 ஆம் தேதி நடைபெறவிருந்த வேல் யாத்திரை ரத்து- எல் முருகன்

 

புயல் காரணமாக 24,25 ஆம் தேதி நடைபெறவிருந்த வேல் யாத்திரை ரத்து- எல் முருகன்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் திமுக பரப்புரையை தொடங்கியிருக்கும் சூழலில், பாஜகவும் வேல் யாத்திரை நடத்தி வருகிறது. ஆனால் அரசியல் கூட்டங்களுக்கு அரசு தடை விதித்து இருப்பதால், அரசியல் கூட்டங்களில் ஈடுபட்டு வரும் பாஜகவினரும் திமுகவினரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கூட்டங்களுக்கான தடையை தகர்க்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

புயல் காரணமாக 24,25 ஆம் தேதி நடைபெறவிருந்த வேல் யாத்திரை ரத்து- எல் முருகன்

இதனிடையே தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தாழ்வு மண்டலமாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக உருவெடுக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது. ‘நிவர்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புயல், நாளை மறுதினம் மாமல்லபுரத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கவுள்ளது. இதனால் சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், கடல் பகுதிகளில் சூறாவளியும் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக 24, 25 ஆம் தேதி நடைபெற இருந்த வேல் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் முருகன் அறிவித்துள்ளார்.