வேல் யாத்திரைக்கு தடைகோரும் வழக்கு : உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

 

வேல் யாத்திரைக்கு தடைகோரும் வழக்கு : உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

பாஜகவின் வேல் யாத்திரைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் முயற்சியாக தமிழக பாஜக தொடங்கியுள்ளது.மாநில தலைவர் எல்.முருகன், நவம்பர் 6 முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தவுள்ளார். திருத்தணியில் 6ஆம் தேதி தொடங்கும் வேல் யாத்திரை, 9ஆம் தேதி ரத்தினகிரி, 20ஆம் தேதி சென்னிமலை, 22ஆம் தேதி மருதமலை, 23ஆம் தேதி பழனி, 25ஆம் தேதி சுவாமிமலை, டிசம்பர் 1ஆம் தேதி திருப்பரங்குன்றம், 2ஆம் தேதி பழமுதிர்ச்சோலை என சென்று இறுதியாக 6ஆம் தேதி திருச்செந்தூரில் முடிகிறது. அங்கு பாஜக பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

வேல் யாத்திரைக்கு தடைகோரும் வழக்கு : உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

அதேசமயம் பாஜகவின் வேல் யாத்திரைக்கு திமுக , காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் என பல கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்த வேல் யாத்திரை மத கலவரத்தை தூண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியோ வேல் யாத்திரைக்கு போட்டியாக ஏர் கலப்பை யாத்திரை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

வேல் யாத்திரைக்கு தடைகோரும் வழக்கு : உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

இந்நிலையில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் நாளை விசாரணை நடத்துகிறது.சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி பாஜகவின் வேல் யாத்திரைக்கு செந்தில்குமார் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.