பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு ஒப்படைப்பு!

 

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு ஒப்படைப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதாவது ஒரு மாவட்டத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் தேவை இல்லை என்றும் பிற மாவட்டங்களுக்குச் சென்று வர பாஸ் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே போல மற்ற மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களும் இ-பாஸ் பெற்றுக் கொண்டு தான் வர வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அவ்வாறு பாஸ் இல்லாமலும், அத்தியாவசிய தேவைகள் இல்லாமலும் வெளியே சுற்றித் திரிந்த வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு ஒப்படைப்பு!

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று முதல் திருப்பி கொடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் கடந்த ஜூன் 19,20,21 ஆம் தேதி சிக்கிய வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இன்று ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதன் படி, சென்னை தாம்பரம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிக்கிய வாகனங்கள் திருப்பி அளிக்கப்பட்டு வருகின்றன.