பீதி காரணமாக சென்னையை காலி செய்து சொந்த ஊர் திரும்பும் மக்கள்! – பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரத்து

 

பீதி காரணமாக சென்னையை காலி செய்து சொந்த ஊர் திரும்பும் மக்கள்! – பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரத்து

பீதி காரணமாக சென்னையை காலி செய்துவிட்டு பொது மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். இதனால் தாம்பரம், செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் செல்வதால் பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்வது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருவதைக் கட்டுப்படுத்த 12 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மருத்துவம், பால் தவிர்த்து வேறு எந்த தளர்வும் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பீதி காரணமாக சென்னையை காலி செய்து சொந்த ஊர் திரும்பும் மக்கள்! – பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரத்துஇதனால் மக்கள் பீதியடைந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். பலரும் இ-பாஸ் பெற்று சொந்த வாகனங்களில் சொந்த ஊர் திரும்புகின்றனர். இதனால் சென்னையை விட்டு வெளியேறும் சாலைகள் எல்லாம் போக்குவரத்து நெரிசல் காரணமாக சிக்கித் தவிக்கிறது. செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதால் பல கி.மீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி தற்காலிகமாக கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. செங்கல்பட்டைக் கடக்கவே பல மணி நேரம் ஆவதால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். வாகனங்கள் வெளியிடும் புகை காரணமாக காற்று மாசும் அந்த பகுதியில் அதிகரித்துள்ளது.