அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… விற்பனையை நினைத்தாலே கலங்கும் வாகன தயாரிப்பாளர்கள்

 

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… விற்பனையை நினைத்தாலே கலங்கும் வாகன தயாரிப்பாளர்கள்

நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த மாதத்தில் வாகன விற்பனை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 2020 மார்ச் இறுதியில் மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. இதனால் 2020 ஏப்ரலில் ஒரு வாகனம் கூட விற்பனையாகவில்லை. அதன்பிறகு வந்த மாதங்களில் வாகன விற்பனை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இருப்பினும், கடந்த சில மாதங்களில்தான் வாகன விற்பனை கொரோனா வைரஸ் பரவலுக்கு முந்தைய அளவு நிலையை எட்டியது.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… விற்பனையை நினைத்தாலே கலங்கும் வாகன தயாரிப்பாளர்கள்
இருசக்கர வாகனங்கள்

இதனால் வாகன தயாரிப்பாளர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் அவர்கள் நிம்மதி நீண்ட நாட்க்ள நிலைக்கவில்லை. தற்போது நம் நாட்டில் கொரோனா வைரஸ் 2வது அலை நிலவுகிறது. கடந்த சில தினங்களாக நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… விற்பனையை நினைத்தாலே கலங்கும் வாகன தயாரிப்பாளர்கள்
வர்த்தக வாகனங்கள்

இது தொடர்பாக சில வாகன டீலர்கள் கூறுகையில், நாடு முழுவதுமாக கடந்த 2 வாரங்களில் ஷோரூம்களுக்கு வருபவர்கள் மற்றும் வாகனங்களுக்கான முன்பதிவை 2019ம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிட்டால் 20 சதவீதம் குறைந்துள்ளது என தெரிவித்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கும் என்பதால் இந்த மாதத்தில் வாகன விற்பனை நிலவரம் மோசமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.