வழக்குகளில் பிடிபட்ட வாகன ஏலம்; மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

வழக்குகளில் பிடிபட்ட வாகன ஏலம்; மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி, சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

வழக்குகளில் பிடிபட்ட வாகன ஏலம்; மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா தலைமையில் நடந்த இந்த ஏலத்தில், மாற்றுத்திறனாளிகள் சங்க கோரிக்கையை ஏற்று, மாற்றுத் திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் வாகன ஏலம் தனியாக நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களும் கலந்துகொண்டு, 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலத்தில் எடுத்தனர். இதனையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் கிடைக்க ஏற்ப்பாடு செய்த மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியாவுக்கு, மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் செல்வநாயகம், பகத்சிங் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

வழக்குகளில் பிடிபட்ட வாகன ஏலம்; மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை