திருமழிசை சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை!

 

திருமழிசை சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 805 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் சென்னையில் 11,131 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருமழிசை சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை!

இந்நிலையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டு திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. திருமழிசை தற்காலிக காய்கறி சந்தைக்கு 450 லாரிகளில் 6000 டன் வரை காய்கறிகள் வந்துள்ளன. இதனால் விலை குறைந்துள்ளது. இருப்பினும் காய்கறிகளை இருப்பு வைக்க முடியாததால் அவை அழுகி போய் விடுவதாக வியாபாரிகள்கவலை தெரிவிக்கின்றனர். இங்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. வியாபாரிகள் மட்டுமே பாஸ் மூலம் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதன்படி ஒரு கிலோ காய்கறிகளின் விலை விவரம் இதோ:-

தக்காளி -ரூ. 10
உருளைக்கிழங்கு- ரூ. 25
பெரிய வெங்காயம் -ரூ.10
கத்தரிக்காய் – ரூ. 20
வெண்டைக்காய் – ரூ. 15
முள்ளங்கி – ரூ. 25
பீன்ஸ் -ரூ. 50
அவரைக்காய்-ரூ. 30
கேரட்-ரூ. 15
பீட்ரூட்-ரூ. 15
புடலங்காய்-ரூ. 20
பாவக்காய்-ரூ. 25
பச்ச மிளகாய்-ரூ. 25
கொத்த மல்லி,
புதினா -ரூ. 10