நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி விலை கடுமையாக உயர்வு

 

நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி விலை கடுமையாக உயர்வு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையினால் வரத்து குறைந்ததால், நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதனால், தாளவாடி, மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் இன்று ஈரோடு நேதாஜி காய்கறி சந்தைக்கு குறைந்த அளவில் காய்கறிகள் வரத்தாகிய நிலையில், அவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் கடந்த வாரம் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி இன்று 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி விலை கடுமையாக உயர்வு

இதேபோல், கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையான கத்தரிக்காய் இன்று 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும், புடலங்காய் கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி மற்றும் பீர்க்கன் காய் தலா 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 20 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது. அதேவேளையில் கேரட், பீட்ரூட் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றின் விலை மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது.