கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரிக்கும் காய்கறி விலை; வியாபாரிகள் சொல்லும் காரணம்!

 

கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரிக்கும் காய்கறி விலை; வியாபாரிகள் சொல்லும் காரணம்!

சில்லறை விற்பனைக்கு அனுமதி அளித்தால் தான் காய்கறிகள் விலை குறையும் என கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தை கோயம்பேட்டில் இருப்பது தான். அங்கு கொரோனா பாதிப்பு பரவியதால் 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட், கடந்த செப்.28ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. தினமும் 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் மார்க்கெட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளின் காரணமாக 150 லாரிகள் மட்டுமே வருகிறதாம்.

கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரிக்கும் காய்கறி விலை; வியாபாரிகள் சொல்லும் காரணம்!

இதுமட்டுமில்லாமல், அதிகாலை 2 மணிக்கே தொடங்கும் வியாபாரம் தற்போது காலை 10 மணிக்கு தொடங்குவதாலும் பகுதி பகுதியாக விற்பனை நடைபெறுவதாலும் வியாபாரிகள் சங்கங்கள் விலையை நிர்ணயம் செய்யும் முறையை கடைபிடிக்க முடியவில்லையாம். இதெல்லாம் காய்கறி விலை உயர்வில் எதிரொலிப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்,

மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரத்துக்கு அரசி அனுமதி அளித்தால் தான் காய்கறிகள் விலை குறையும் என்றும் வியாபாரிகள் கூறியுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் முறையாக தடுப்பு நடவடிக்கையை பின்பற்றினால் கடைகள் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.