வீரராகவ பெருமாள் கோயில் தை மாத பிரம்மோற்சவ விழா… பக்தர்கள் இன்றி நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சி…

வீரராகவ பெருமாள் கோயில் தை மாத பிரம்மோற்சவ விழா… பக்தர்கள் இன்றி நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சி…

திருவள்ளூர்

திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை மாத பிரம்மோற்சவத்தின் 9ஆம் நாளான இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

வீரராகவ பெருமாள் கோயில் தை மாத பிரம்மோற்சவ விழா… பக்தர்கள் இன்றி நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சி…

108 வைணவ திவ்யதேசங்களில் 59-வது திவ்யதேசமாக திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயில் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் தை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை ஒட்டி நாள்தோறும் வெவ்வேறு விதமான வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. 7-ஆம் நாளான நேற்று முன்தினம் திருத்தேர் விழா நடைபெற்ற நிலையில், உற்சவத்தின் 9-ஆம் திருநாளான இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

வீரராகவ பெருமாள் கோயில் தை மாத பிரம்மோற்சவ விழா… பக்தர்கள் இன்றி நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சி…

இதனையொட்டி, இன்று காலை உற்சவமூர்த்தி வீரராகவர் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி, நான்கு மாடவீதிகளின் வழியாக பவனி வந்தார். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டு சென்றனர். தொடர்ந்து, கோயில் குளத்திற்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட சக்கரத்தாழ்வார் மற்றும் சின்ன பெருமாள் சுவாமிகள் கோயில் குளத்தில் புனித நீராடினர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில் குளத்தில் நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அர்ச்சகர்கள் மட்டும் இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.