வீரராகவர் கோயில் அமாவாசை பூஜை; பொதுமக்கள் பங்கேற்க தடை

 

வீரராகவர் கோயில் அமாவாசை பூஜை; பொதுமக்கள் பங்கேற்க தடை

திருவள்ளூர்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் நாளை நடைபெறும் அமாவாசை சிறப்பு பூஜையில், பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வீரராகவர் கோயில் அமாவாசை பூஜை; பொதுமக்கள் பங்கேற்க தடை

திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற வைத்திய வீரராகப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை தினத்தன்று திருவள்ளூர் மற்றும் வேலூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர். அதேபோல் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களும், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கோயிலுக்கு வருவது வழக்கம்.

வீரராகவர் கோயில் அமாவாசை பூஜை; பொதுமக்கள் பங்கேற்க தடை

இந்நிலையில், நாளை அமாவாசை தினம் வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று பிற்பகல் முதல் நாளை முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பொதுமக்களின் நலன்கருதி பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ள கோயில் நிர்வாகம், அனைவரும் வீட்டில் இருந்தபடியே வீரராகவ பெருமாளை தரிசிக்குமாறு கேட்டுகொண்டு உள்ளது.எ