சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரப்பன் கூட்டாளி உயிரிழந்தார்!

 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரப்பன் கூட்டாளி உயிரிழந்தார்!

சந்தனக்கடத்தல் வீரப்பன் தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்த வீரப்பன் தமிழக, கர்நாடகா, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். இதை தொடர்ந்து ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 18 அக்டோபர் 2004 ஆம் ஆண்டு ஐபிஎஸ் விஜயகுமார் தலைமையிலான தமிழக போலீசார் வீரப்பனை சுட்டு கொன்றனர். இதை தொடர்ந்து இவரது கூட்டாளிகள் சிறையிலடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரப்பன் கூட்டாளி உயிரிழந்தார்!

இந்நிலையில் கர்நாடகா மைசூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின்  கூட்டாளி உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். ஏற்கனவே வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரில் ஒருவரான சைமன் மைசூர் சிறையில் 2018 ஆம் ஆண்டில் உயிரிழந்தார். 1993ல் கைதான வீரப்பனின் கூட்டாளிகள் மீசை மாதையன், ஞானப்பிரகாசம் மைசூர் சிறையில் உள்ளனர்.