நித்யானந்தாவின் கைலாச நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கோரி விண்ணப்பம்!

 

நித்யானந்தாவின் கைலாச நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கோரி விண்ணப்பம்!

நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா இன்று வரை தலைமறைவாக இருந்து வருகிறார். கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வரும் நித்யானந்தா, அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து காவல்துறையினர் அறிந்தபாடில்லை. இந்த நிலையில், கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாட்டிற்கு தனி நாணயம், ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு அதிரவைத்தார் நித்யானந்தா. இவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

நித்யானந்தாவின் கைலாச நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கோரி விண்ணப்பம்!

இந்நிலையில் நித்யானந்தாவின் கைலாச நாட்டில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதில்கோரி மதுரையின் வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் சார்பில் அனுமதி கோரி விண்ணப்பிக்க பட்டுள்ளது. இதுதொடர்பான விண்ணப்பத்தில், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா நோய் தோற்று அதிகரித்துள்ளதால் கோவில் விழாக்கள் மற்றும் வீர விளையாட்டு களை நடத்துவது சவாலாக உள்ளதாகவும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமே இல்லாத கைலாச நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கைலாச நாட்டில் உணவகம் வைக்க அனுமதி கோரியிருந்தார். அதேபோல் விவசாயி ஒருவர் கைலாசா தேசத்தில் இயற்கை விவசாயம் செய்ய அனுமதி தரவேண்டும் என நித்தியானந்தாவுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடதக்கது.