• March
    30
    Monday

Main Area

Main



#வீதிக்குவாங்க_ரஜினி ஹேஷ்டாக் டிரெண்டிங்...மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

ரஜினி
ரஜினி

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ttn

இதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய   அவர்,  "என்பிஆர் அவசியம், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் நான் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். சிஏஏ விவகாரத்தில் பீதி கிளப்பப்பட்டுள்ளது. இதில் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன். சுயலாபத்திற்காக அரசியல் கட்சிகள்  தூண்டி விடுகிறார்கள். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக மாணவர்கள் ஒரு போராட்டத்தில் இறங்குவதற்கு முன்பு யோசித்து முடிவெடுத்து இறங்க வேண்டும். இல்லாவிட்டால் அரசியல் காட்சிகள் அவர்களை பயன்படுத்திக்கொள்ளும். யோசிக்காமல் முடிவெடுத்தால்  மாணவர்களுக்குத் தான் பிரச்னை"என்றார்.  இந்த விவகாரம் பெரிய பூதாகரமாக வெடித்தது. 

ttn

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது நேற்றிரவு போலீசாரால் தடியடி நடத்தப்பட்டதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

ttn

தற்போது சமூகவலைத்தளத்தில்   #வீதிக்குவாங்க_ரஜினி என்ற ஹேஷ்டாக் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன் என்று ரஜினி கூறியிருந்த நிலையில் தற்போது அவரை கிண்டல் செய்யும் விதமாக பல்வேறு மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது. 
 

2018 TopTamilNews. All rights reserved.