மீண்டும் திறக்கப்பட்டது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்!

மீண்டும் திறக்கப்பட்டது  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மீண்டும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் திறக்கப்பட்டது  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்!

உலக அளவில் தமிழகத்திற்குப் புகழ் சேர்க்கும் விஷயங்களுள் ஒன்று வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். 30 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள இந்த புகலிடத்திற்கு புவியின் வடக்கு முனையை ஒட்டி இருக்கின்ற சைபீரியக் கடுங்குளிரில் வாழுகின்ற பறவைகள் வருகின்றன.

மீண்டும் திறக்கப்பட்டது  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்!

அத்துடன் வறண்ட நிலமான ஆஸ்திரேலியாவில் இருந்தும் சுமார் 5,000 முதல் 10 ஆயிரம் கிலோமீட்டர்கள் பறந்து வந்து, இங்கேயே தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால் வேடந்தாங்கலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை களைகட்டும். குறிப்பாக வெளிநாடுகளிருந்து வரும் பயணிகள் வேடந்தாங்கலை நிச்சயம் விரும்புவர்.

மீண்டும் திறக்கப்பட்டது  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்!

இந்நிலையில் கொரோனாவால் மூடப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சுமார் 16ஆயிரம் பறவைகள் வந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் பறவைகள் சரணாலயத்திற்கு வருபவர்களுக்கு முக கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.