வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க முடிவு – தமிழக அரசு தகவல்

 

வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க முடிவு – தமிழக அரசு தகவல்

இந்தியாவில் உள்ள முக்கிய பறவைகள் சரணாலயங்களில் ஒன்றான வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதனை எதிர்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் எஸ்.ஸ்டாலின் ராஜா என்பவர் மனுதாக்கல் செய்தார். அவர் அளித்த மனுவில், கடந்த 1962-ஆம் ஆண்டு வேடந்தாங்கல் மெட்ராஸ் வனச்சட்டத்தின் கீழ் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டதாகவும் 5 கி.மீ பரப்பளவில் இருக்கும் சரணாலயத்தை ழிற்சாலையின் விரிவாக்கத்துக்காக 3 கிமீ ஆக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதனால் சரணாலயத்துக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து விடும் என்றும் கூறி இருந்தார்.

வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க முடிவு – தமிழக அரசு தகவல்

மேலும் சரணாலயத்தின் பரப்பளவை எந்த காரணத்தை கொண்டும் குறைக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது, மத்திய விலங்குகள் நல வாரியத்துக்கு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைப்பது தொடா்பாக கருத்துரு மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக எழுந்த வழக்கில், வேடந்தாங்கல் சரணாலய பரப்பளவை 5 கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் இருந்து 3 கிமீ ஆக குறைக்க முடிவு எடுத்துள்ளதாகவும் மேம்பாட்டு பணிகளுக்காக பரப்பளவு குறைக்கப்படுவதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது