ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை : வேதாந்தா மேல்முறையீடு செய்ய முடிவு!

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை : வேதாந்தா மேல்முறையீடு செய்ய முடிவு!

தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை : வேதாந்தா மேல்முறையீடு செய்ய முடிவு!

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கானது நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் தமிழக அரசு ஆலைக்கு சீல் வைப்பதாக எடுத்த முடிவு செல்லும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை : வேதாந்தா மேல்முறையீடு செய்ய முடிவு!

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. மக்களை சமாதானப்படுத்தும் நோக்கத்துடனேயே ஆலைக்கு சீல் என்ற ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வாதம் நிராகரிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீடு செய்யும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரிய கோரிக்கையும் உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.