திமுகவுக்கு எதிராக விசிக திடீர் ஆர்ப்பாட்டம் : உடையும் கூட்டணி?

 

திமுகவுக்கு எதிராக விசிக திடீர் ஆர்ப்பாட்டம் : உடையும் கூட்டணி?

தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுகவுக்கு எதிராக விசிக திடீர் ஆர்ப்பாட்டம் : உடையும் கூட்டணி?

இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை நடத்திய நிலையில் விசிக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை ஏற்க மாட்டோம்
என்று சென்னை அசோக்நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திமுகவுக்கு எதிராக விசிக திடீர் ஆர்ப்பாட்டம் : உடையும் கூட்டணி?

இதையடுத்து வெளியில் வந்த திருமாவளவன் , தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் அங்கிருந்து அண்ணா அறிவாலயத்திற்கு அவர் வருகை புரிந்துள்ளார். திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை ஏற்கக் கூடாது என்று சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருமாவளவன் முன்பு விசிக தொண்டர்கள் முழக்கமிட்டது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.தொண்டர்களின் மனநிலையை அறிந்து திமுக கூட்டணியிலிருந்து விலகுவாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.