தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? சர்ச்சையில் சிக்கிய விஜய்

 

தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? சர்ச்சையில்  சிக்கிய விஜய்

தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்ன? என்று நடிகர் விஜய்யிடம் வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 65 ஆவது படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது . இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும்இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் விஜயின் 47ஆவது பிறந்த நாளையொட்டி வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய்யின் ஆங்கிலச்சொல் தலைப்புகளாக லவ் டுடே, ஒன்ஸ்மோர், ஃபிரண்ட்ஸ் ,யூத் ,மாஸ்டர் என படங்கள் வெளியான நிலையில் 6-வது படமாக பீஸ்ட் வெளியாக உள்ளது. இது தற்போது சர்ச்சையாக உருமாறியுள்ளது.

தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? சர்ச்சையில்  சிக்கிய விஜய்

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு, “நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன.ஆனால் தமது தாய்மொழியான #தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ?Master, Bigil,படங்களை தொடர்ந்து #Beast என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.