“என்மீது பழிசுமத்தி அவதூறு பரப்புகின்றனர்” : திருமாவளவன்

 

“என்மீது பழிசுமத்தி அவதூறு பரப்புகின்றனர்” : திருமாவளவன்

தன் மீது பழிசுமத்தி அவதூறு பரப்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“என்மீது பழிசுமத்தி அவதூறு பரப்புகின்றனர்” : திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் பெண்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் கூறியதாக தெரிகிறது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பாஜக உள்ளிட்ட பல தரப்பினர் போலீசில் புகார் அளித்தனர். அந்த வகையில் திருமாவளவன் மீது சென்னை காவல் ஆணையரிடமம் புகார் அளிக்கப்பட்டது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். இதையடுத்து திருமாவளவன் மீது மத உணர்வை புண்படுத்தும் சொற்களைச் சொல்லுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து எம்.பி. திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” #மகளிரைக்கொச்சைப்படுத்துவதுமனுநூலே. அதனைச் சுட்டிக் காட்டியதற்காகவே என்மீது பழிசுமத்தி அவதூறு பரப்புகின்றனர். இன்று நடைபெறுவது என்மீதான பழியைத் துடைக்கும் போராட்டமில்லை;
மகளிர்மீதான இழிவைத் துடைக்கும் போராட்டம். மனுநூலின்தாக்கத்தைத்தகர்த்தெறிவதே_மகளிர்மீட்சி!” என்று பதிவிட்டுள்ளார்.