பெருந்துறையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வி.சி.க. ஆர்ப்பாட்டம்

பெருந்துறையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வி.சி.க. ஆர்ப்பாட்டம்

ஈரோடு மேற்கு மாவட்டம் பெருந்துறையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாணவர்களின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டமும், பலியான மாணவ மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பெருந்துறையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வி.சி.க. ஆர்ப்பாட்டம்

பெருந்துறை பேருந்து நிலையம் முன்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாணவர்களின் உயிரைப் பறிக்கும் மத்திய அரசின் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நீட் தேர்வால் பலியான மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெருந்துறையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வி.சி.க. ஆர்ப்பாட்டம்

கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்ட பொருளாளர் வி,விஜயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தைவள்ளுவன், முற்போக்கு மாணவர் அணியின் மாநில துணைச் செயலாளர், கோவைகுமணன் ஆகியோர் நீட் தேர்வால் ஏற்படும் அவலங்கள் குறித்து உரையாற்றினர்.

பெருந்துறையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வி.சி.க. ஆர்ப்பாட்டம்

இந்நிகழ்ச்சியில் பெருந்துறை ஒன்றிய செயலாளர் மணல்,முரளி, நகரச்,செயலாளர் சி.அண்ணாமலை, ஒன்றிய அமைப்பாளர் வெள்ளிங்கிரி, ஒன்றிய துணைச் செயலாளர் குமார்(எ) குழந்தைசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் எம், மெல்வின், ஒன்றிய நகர துணைச் செயலாளர் மத்லூப், ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் முகிருஷ்ணமூர்த்தி, சென்னிமலை ஒன்றிய செயலாளர் ஈரோடு கிழக்கு ஆட்டோதொழிற்சங்கமாவட்டஅமைப்பாளர் ஆட்டோபாஸ்கர் பிசம்பத், அரங்கமுதல்வன் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்தம்பிராஜன் ஆம்னிதுறை ஈரோடு வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் சத்தியமூர்த்தி பவானிசாகர் தெற்கு ஒன்றிய பெரியகாளையன் சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் செயலாளர் மகளிர் விடுதலைஇயக்க வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை இரா.சித்ரா, கோபி சட்டமன்ற தொகுதி துணைச்செயலாளர் திருமா மு. பூபதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நீட் தேர்வால் பலியான மாணவ மாணவிகளின் உருவ படத்திற்கு மலர் தூவி, மெழுகு பத்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

பெருந்துறையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வி.சி.க. ஆர்ப்பாட்டம்