தொகுதி பங்கீடு இழுபறி : அவசர ஆலோசனை நடத்தும் விசிக!

 

தொகுதி பங்கீடு இழுபறி : அவசர ஆலோசனை நடத்தும் விசிக!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வருகின்ற 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் பிரதான கட்சிகள் தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதால் இந்த தேர்தலில் எப்படியாவது வென்று விட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கிறது திமுக. அதோடு, அதிமுகவுக்கு எதிராக மாபெரும் கூட்டணியை களமிறக்கவும் முடிவு செய்திருக்கிறது.

தொகுதி பங்கீடு இழுபறி : அவசர ஆலோசனை நடத்தும் விசிக!

திமுகவுடன் கூட்டணி அமைக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் கொடுத்தாகிவிட்டது. அதே போல இடதுசாரி கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், நேற்று மாலை விசிகவுடன் திமுக நடக்கவிருந்தது. ஆனால், விசிக தரப்பில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. இதன் மூலம் திமுக – விசிக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பது அம்பலமானது.

தொகுதி பங்கீடு இழுபறி : அவசர ஆலோசனை நடத்தும் விசிக!

இதையடுத்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விசிகவுக்கு திமுக அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த நிலையில், திமுக உடனான தொகுதி பங்கீடு தொடர்பாககாலை 10 மணிக்கு விசிக அவசர ஆலோசனையை தொடங்கியிருக்கிறது. சென்னை அசோக் நகர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.