விசிக மாநில பொருளாளர் முகம்மது யூசுப் மரணம்… அதிர்ச்சியில் திருமா!

 

விசிக மாநில பொருளாளர் முகம்மது யூசுப் மரணம்… அதிர்ச்சியில் திருமா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், முகமது யூசுப்புக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. விசிக பொருளாளர் முகமது யூசுப் கொரோனா கொடுந் தொற்றுக்கு ஆளாகியிருப்பது கவலை அளிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பதிவிட்டிருந்தார்.

விசிக மாநில பொருளாளர் முகம்மது யூசுப் மரணம்… அதிர்ச்சியில் திருமா!

கொரோனாவின் பிடியிலிருந்து அவர் விரைந்து மீண்டு வர வேண்டுமென்றும் ஜெய்பீம் என்னும் அவரது முழக்கம் நம் மேடைகளில் வழக்கம்போல ஓங்கி ஒலிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விசிக மாநில பொருளாளர் முகம்மது யூசுப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு தொல்.திருமாவளவன் உள்ளிட்ட விசிகவினரை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. அரசியல் கட்சியினர் பலர் யூசுப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.