• April
    07
    Tuesday

Main Area

Main



காவல்துறையினர் பாதுகாப்பில் சென்ற விசிக பொதுச் செயலாளர் வேன் மீது தாக்குதல்

ரவிக்குமார்
ரவிக்குமார்

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வருவதையொட்டி தமிழகத்தில் பிரச்சாரம் களைகட்டத் துவங்கியுள்ளது.

Cccv

விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

vck

நேற்றிரவு விழுப்புரம் கோலியனூர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது மர்ம கும்பல் ஒன்று அவர் வாகனத்தை மறித்து கல் வீசி தாக்கியுள்ளது. இதில் விசிக உறுப்பினர் செந்தமிழ் என்பவர் படுகாயமடைந்தார். அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்தபோதே இந்த சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

 

2018 TopTamilNews. All rights reserved.