விடுதலைச் சிறுத்தைகள் கட்சி களமிறங்கும் தொகுதிகளின் விவரம்!

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி களமிறங்கும் தொகுதிகளின் விவரம்!

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 6 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து கையெழுத்தானது. சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் விசிக போட்டியிடவுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி களமிறங்கும் தொகுதிகளின் விவரம்!

இந்நிலையில் திமுக கூட்டணியில் 4 தனித்தொகுதிகளையும், 2 பொதுத்தொகுதிகளையும் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வானூர்(தனி), காட்டுமன்னார்கோவில்(தனி), செய்யூர்(தனி), அரக்கோணம்(தனி), நாகை, திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் விசிக களம் காணுகிறது. விரைவில் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.