தேர்தலில் களம்காணும் விசிக வேட்பாளர் பெயர்கள் அறிவிப்பு

 

தேர்தலில் களம்காணும் விசிக வேட்பாளர் பெயர்கள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 6 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து கையெழுத்தானது. சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் விசிக போட்டியிடவுள்ளது.வானூர்(தனி), காட்டுமன்னார்கோவில்(தனி), செய்யூர்(தனி), அரக்கோணம்(தனி), நாகை, திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் விசிக களம் காணுகிறது.

தேர்தலில் களம்காணும் விசிக வேட்பாளர் பெயர்கள் அறிவிப்பு

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள விசிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகை – ஆளூர் ஷா நவாஸ், காட்டுமன்னார் கோயில் – சிந்தனை செல்வன், செய்யூர் – பனையூர் பாபு, வானூர் – வன்னிஅரசு, திருப்போரூர் – எஸ்.எஸ் பாலாஜி, அரக்கோணம் – கவுதம சன்னா உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.