ரஜினிகாந்தை அமித்ஷா சந்திக்கவில்லை: விபி துரைசாமி

 

ரஜினிகாந்தை அமித்ஷா சந்திக்கவில்லை: விபி துரைசாமி

அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2011ல் நடந்த தேர்தலில் அதிகாரத்தை இழந்த திமுக, அடுத்து 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது. இதனால் வரும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற முனைப்புக்காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரையிலும் பாஜக அக்கூட்டணியில் தொடர்கிறதா என்கிற சந்தேகம் இருந்து வருகிறது. வரும் 21ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா, சென்னையில் ரஜினியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

ரஜினிகாந்தை அமித்ஷா சந்திக்கவில்லை: விபி துரைசாமி

இதனிடையே நாமக்கல்லில் நடைபெற்ற வேல்யாத்திரையில் பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். வேல்யாத்திரைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி, “ மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாவில் தான் பங்கேற்க வருகிறார். கூட்டணி குறித்து பேச இன்னும் நாட்கள் உள்ளது. அமித்ஷா ரஜினிகாந்த்தை சந்திப்பதற்கு குறித்து எந்த திட்டமும் இதுவரை இல்லை, நாங்கள் யாரையும் மிரட்டவோ உருட்டவோ கிடையாது. நாங்கள் யாருக்கும் எதிரிகள் இல்லை. தவறு செய்தவர்கள் வேல் யாத்திரையை கண்டு அஞ்சுகின்றனர். பாஜக மீது அதிமுக விமர்சனம் வைத்தாலும் நாங்கள் கூட்டணி தர்மத்தை காப்போம்” எனக் கூறினார்.