வீட்டில் செல்வ செழிப்பு நிலைக்க… படுக்கை அறைக்கான வாஸ்து டிப்ஸ்!

 

வீட்டில் செல்வ செழிப்பு நிலைக்க… படுக்கை அறைக்கான வாஸ்து டிப்ஸ்!

நாம் வேலை செய்யும் இடத்துக்கு அடுத்தபடியாக நாம் அதிக நேரம் இருப்பது நம்முடைய படுக்கை அறையில்தான். நம்முடைய தூக்கம்தான் நம்முடைய நாளை தீர்மானிக்கிறது. எனவே,  நம் உடலின் பாசிடிவ் எனெர்ஜி அதிகரிக்க படுக்கை அறை டிப்ஸ் சிலவற்றைக் காண்போம்.

வீட்டில் செல்வ செழிப்பு நிலைக்க… படுக்கை அறைக்கான வாஸ்து டிப்ஸ்!

வீடு கிடைத்தால் போதும் என்பதற்காக பிடித்தமான வீட்டை வாங்கி அவதியுறுபவர்கள் பலர். அதிலும் ஃபிளாட் வாங்கும்போது வாஸ்து அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது என்று சொன்னதும் நம்பிவிடுகின்றனர். படுக்கை அறை வட கிழக்கு, தென் கிழக்கு பகுதியில் அமையக் கூடாது. இந்த திசைகளில் உள்ள படுக்கை அறைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படும், வேலையில் தடைகள் ஏற்படும், தன்னுடைய அல்லது தங்கள் மகளின் திருமணம் காலதாமதம் ஆகும். வேலை இழப்பு கூட ஏற்படலாம்.

படுக்கை அறைகள் தென் மேற்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும். அதுதான் நிலைத்தன்மையையும் உள் பலத்தையும் அளிக்கும். பல படுக்கை அறை உள்ள வீடு என்றால், வீட்டின் மூத்தவர்களுக்கு தென் மேற்கு அறை ஒதுக்கப்பட வேண்டும். வீட்டின் இளையவருக்கு தெற்கு (மைய) அறை ஒதுக்கப்பட வேண்டும்.

குடும்பத்தை வழிநடத்துபவர்களுக்குத் தென்மேற்கு படுக்கை அறைதான் சரியானது. தென் மேற்கு படுக்கை அறை வீட்டு உரிமையாளருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் செல்வச் செழிப்பையும் தருகிறது. ஆயுளை மேம்படுத்துகிறது.

தென் கிழக்கு படுக்கை அறை தூக்கமின்மையை ஏற்படுத்தும். குடும்பத்தில் குழப்பத்தை, பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும் தென் கிழக்கு திசையில் ஆட்சி செய்யும் அக்னியின் மூர்க்க குணம் நமக்கும் வரும். பயம், பதற்றம், அதிக வெட்கப்படும் குழந்தைகள், நபர்கள் இந்த அறையை பயன்படுத்தலாம்.

புதிதாக திருமணம் ஆனவர்கள் வட கிழக்கு, தென் கிழக்கு திசையில் உள்ள படுக்கை அறையை பயன்படுத்த வேண்டாம். இதுவும் வருவாய் இழப்பு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.

அதே போல் எந்த திசைக்கும் பிரச்னை இன்றி மையத்தில் இருப்பது போலவும் அமைக்கக் கூடாது. நடுப் பகுதி என்பது பிரம்மஸ்தானம் ஆகும். பிரம்ம ஸ்தானம்தான் ஆற்றலின் அடிப்படை. இது படுக்கை அறையின் அடிப்படை விதிகளுக்கு எதிராக அமைந்துவிடும். எனவே, நடுப் பகுதியில் படுக்கை அறையை அமைக்க வேண்டாம்.

படுக்கை அறையில் படுக்கைக்கு எதிரில் கண்ணாடி வைக்கக் கூடாது. கண்ணாடியில் நாம் தூங்குவதின் பிரதிபலிப்பு தெரிவது துரதிஷ்டமாக கருதப்படுகிறது.

படுக்கை அறையில் அடர் நிறங்களைக் கொண்டு பெயிண்ட் அடிக்க வேண்டாம். வெள்ளை, இளஞ்சிவப்பு, க்ரீம் கலர் பெயிண்ட் அடிக்கலாம்.