வசந்தகுமார் எம்.பி மறைவு : தமிழக அரசியலுக்கும்- தொழில்துறைக்கும் பேரிழப்பு

 

வசந்தகுமார் எம்.பி மறைவு : தமிழக அரசியலுக்கும்- தொழில்துறைக்கும் பேரிழப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் உயிரிழப்பு, தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வசந்தகுமார் எம்.பி மறைவு : தமிழக அரசியலுக்கும்- தொழில்துறைக்கும் பேரிழப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அவரும், அவரது மனைவியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த 10 நாட்களாக சிகிச்சையில் இருந்து வந்தார். உடல்நலம் தேறி வந்து மீண்டும் சுறுசுறுப்பாக பணியாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில், அவரது இழப்பு அரசியல் வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கட்சி பேதமின்றி, அரசியல் பேதமின்றி தமிழகத்தில் அனைத்து கட்சியினருடன் இணைந்து செயல்பட்ட அவர், தமிழக வளர்ச்சியிலும் அதிக அக்கறை கொண்டிருந்தவர்.

காங்கிரஸ் குடும்பத்தில் ஊறி வளர்ந்த வசந்தகுமார், 2006 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் நாங்குநேரி தொகுதியில் வெற்றிபெற்று தமிழக சட்டசபைக்கு தேர்வானார். கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலுக்கான எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு கொண்டிருந்தவர்.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்ட தொடரில் அதிக நாட்கள் வருகை தந்து வசந்தகுமார்தான். அரசியல் வாதிகளில் சொத்து மதிப்பை பகிரங்கமான வெளியிட்டவர் அவர். சிறந்த அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், சிறந்த தொழில் அதிபராகவும் இருந்தவர்.

வசந்தகுமார் எம்.பி மறைவு : தமிழக அரசியலுக்கும்- தொழில்துறைக்கும் பேரிழப்பு

முழு நேர அரசியலில் ஈடுபட்டாலும், தொழில் நடவடிக்கைகளில் எந்த குழப்பமும் இல்லாமல் இருந்தவர்.
எம்.எல்.ஏ ஆவதற்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பே தொழிலதிபராக ஆகிவிட்டேன் என குறிப்பிடுவதுடன், அதை செயல்படுத்தும் விதமாக, தனது சொந்த செலவிலேயே மக்களுக்கு பல நற்பணிகளை செய்தவர்.

மிகச் சிறிய முதலீட்டைக் கொண்டு மளிகைக் கடையைத் தொடங்கியதாக சொல்வார். தன் மீது நம்பிக்கை வைத்த ஒரு வாடிக்கையாளர் அளித்த 22 ரூபாயை வைத்து தொழில் தொடங்கினேன் என வெளிப்படையாக சொன்னவர்.

அவர் விற்பனையாளராக வேலை பார்த்த விஜிபி நிறுவனத்தை போலவே தவணைப்பொருட்கள் வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி தமிழகம் முழுவதும் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தை தனி ஒருவராக உருவாக்கினார்.

வசந்தகுமார் எம்.பி மறைவு : தமிழக அரசியலுக்கும்- தொழில்துறைக்கும் பேரிழப்பு

அடித்தட்டிலிருந்து வந்தால், என்னவோ, தன் மூலம் பல நூறு குடும்பங்கள் வாழ்வதுதான் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பல இடங்களில் தெரிவித்துள்ளார். 1970 களில் விற்பனையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர், மேலாண்மை பட்டங்கள் இல்லாமலும் வெற்றிகரமான தொழிலதிபராக மாறமுடியும் என்பதை உணர்த்தியவர். தமிழகத்தில் தவணையில் பொருட்கள் அளிக்கும் விற்பனையை பரவலாக்கியத்தில் மிகப்பெரிய மேலாண்மை தத்துவத்தை எளிமையாக்கியவர்.

பெரிய நிறுவனங்களுக்கும் பொருட்கள் விநியோகிக்கிறோம். அங்கு வேலை செய்யும் கடைநிலை பணியாளர்களுக்கும் பொருட்கள் விற்பனை செய்கிறோம். தொழிலில் எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை என்பதே தங்கள் அறம் என்பார்.

தமிழக அரசியலிலும், தொழில் துறையிலும் முன்னுதாரணமாக திகழ்ந்த வசந்தகுமாரின் இழப்பு தமிழகத்துக்கு பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும்.

-நீரை மகேந்திரன்.