Home தமிழகம் "டீ கடைக்காரரையும் டிவி வாங்க வைத்தவர் வசந்தகுமார்"-கண்ணீர் அஞ்சலியுடன் கூறிய ஏழைகள்

“டீ கடைக்காரரையும் டிவி வாங்க வைத்தவர் வசந்தகுமார்”-கண்ணீர் அஞ்சலியுடன் கூறிய ஏழைகள்

ஒரு காலத்தில் பணக்காரர்கள் மட்டுமே டிவி வாங்கமுடியுமென்றிருந்த நிலையையே மாற்றி, பரம ஏழைகளையும் வாங்கும் விதமாக பல சலுகைகளை கொடுத்தவர் நேற்று காலமான வசந்தகுமார்.

ஒரு பிரபலமான டிவி ஷோ ரூமில் வேலைக்காரராக தன் வாழ்க்கையை துவக்கிய வசந்த் அண்ட் கோ உரிமையாளர் வசந்தகுமாரின் வெற்றிக்கதை, உண்மையாக உழைத்தால் நிச்சயம் வெற்றிபெறலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் .
அவர் ஒரு பிரபலமான டிவி ஷோ ரூமில் மாதம் 70 ரூபாய்க்கு சம்பளத்துக்கு சேர்ந்து ,பிறகு ஆறு ஆண்டுகாலம் பணியாற்றிய பிறகு அங்கிருந்து வெளியேறி ,தி நகரில் ஒரு மரப்பலகையில் தன்னுடைய கடையின் பெயரை எழுதி ,மக்களுக்கு தவணை முறையில் டிவி வழங்கி தன்னுடைய வியாபாரத்தினை தொடங்கினார் .அந்த கடைக்கு வாடகை அட்வான்ஸ் கொடுக்க கூட காசில்லாமல் கடனுக்கு ஒரு சின்ன கடையை பிடித்து சைக்கிளில் சென்று மக்களிடம் வீட்டு உபயோக பொருட்களை விற்றுவந்தார் .
அப்போது பணக்காரர்கள் மட்டுமே டிவி வாங்கமுடியும் என்ற நிலையை, தன்னுடைய தவணை முறை திட்டத்தால் ஏழைகளின் வீடுகளிலும் டிவி யை வாங்க வைத்த பெருமை இவரை சாரும் .அப்போது ஆன்டெனா அறிமுகப்படுத்தப்பட்டு, கருப்பு வெள்ளை டிவி அறிமுகமான காலத்தில் ஏழைகளின் வீடுகளில் தொலைக்கட்சியை பெட்டியை கொடுத்து விட்டு, மாதாமாதம் காசு வங்கி சென்றுள்ளார் .இன்று அதே தொலைக்காட்சியில் அவரின் சடலத்தை பார்த்து ஏழைகள் கண்ணீர் விட்டார்கள்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews