‘வாசன் ஐ கேர்’ அருண் மரணத்தில் விசாரணை தேவை : புயலை கிளப்பும் பாஜக நாராயணன் திருப்பதி

‘வாசன் ஐ கேர்’ அருண் மரணத்தில் விசாரணை தேவை : புயலை கிளப்பும் பாஜக நாராயணன் திருப்பதி

வாசன் ஐ கேர் அருண் மரணத்தில் விசாரணை தேவை என பாஜகவின் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

‘வாசன் ஐ கேர்’ அருண் மரணத்தில் விசாரணை தேவை : புயலை கிளப்பும் பாஜக நாராயணன் திருப்பதி

திருச்சியை தலைமையிடமாக கொண்டு வாசன் ஐ கேர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சுமார் 170 கிளைகளை கொண்ட இந்த குழுமத்தின் தலைவர் 51 வயதான அருண் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கியநண்பர் ஆவார். இவர் நேற்று காலை மாரடைப்பால் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டது என்றும் அதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

‘வாசன் ஐ கேர்’ அருண் மரணத்தில் விசாரணை தேவை : புயலை கிளப்பும் பாஜக நாராயணன் திருப்பதி

ஆனால் மற்றொருபுறம் கடன் நெருக்கடிகளால் அருண் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அத்துடன் நெருக்கடியான சூழலில் வாசன் ஹெல்த் கேர் மருந்தகங்களுக்கு தமிழகம் முழுவதும் மருந்து மாத்திரைகள் சப்ளை செய்த உரிமையாளர்கள் நிலுவை தொகையை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பாஜகவின் நாராயணன் திருப்பதி, வாசன் ஐ கேர் குழும தலைவர் மரணம் குறித்து விசாரணை தேவை என அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். இதனால் மரணம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.